கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காணாமல்போயிருந்த பெண், உரைப்பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
அப்பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமொன்றுக்கு கீழிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி என்ற 67 வயதான குறித்த பெண், 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளதாகவும் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியைப் பராமரிப்பதற்காக, வாடகை வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனிமையில் வசித்து வந்த குறித்த பெண், நேற்றைய தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலிருந்து காணவில்லை என்று அறிவிக்கப்படுகிறது.
அப்பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதாகவும், அதனாலேயே வீட்டு உரியைமாளரால் நேற்று மாலை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார், விசாரணைகளை முன்னெடுத்ததுடன், இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.