Date:

ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி சேனரத் நியமிக்கப்படவுள்ளார்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி சேனரத் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்பொழுது பிரதமரின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பி.பீ. ஜயசுந்தரவின் ஜனாதிபதி செயாயலாளர் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தியிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.பீ. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் பி.பீ. ஜயசுந்தர கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத்ன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியுமாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...