பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கொத்மலை மற்றும் இறம்பொடை போன்ற பிரதேசங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.