Date:

நீர் விநியோகம் 12 மணியுடன் வழமைக்கு திரும்பும்!

கொழும்பின் பல பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் நீர் விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் முழுமையாக வழமைக்கு சில மணித்தியாலங்கள் செல்லும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை திருத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இன்று(27) நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகத் தடை முழுமையாக வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றை முதல், 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முன்னர் தெரிவித்திருந்தது.

அதன்படி, கொழும்பு, கோட்டே, கடுவலை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம்...

இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு...

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...