Date:

அடுத்த வாரம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பஸ் கட்டணத்தை அதிககரிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதாக என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று (26) ஹரிஸ்பத்துவவில் அமைந்துள்ள அங்கும்புர நகர அபிவிருத்தித் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சிந்தித்து குறைந்தபட்ச திருத்தத்திற்காவது செல்ல வேண்டும். இந்த மாற்றம் மீள் திருத்தத்துக்கு உட்பட்டதாகவே அமையும்.

எனவே அடுத்த வாரம் சில கட்டணத் திருத்தங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படும். இந்த மாற்றம் தானாக விருப்பத்துடன் செய்யப்படுபவை அல்ல.

எரிபொருள் விலை குறைவு மற்றும் அமர்ந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் போது மீண்டும் கட்டணம் குறைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். எனவே, வரும் புதன்கிழமைக்குள் பேருந்து கட்டணத்தில் சிறிது உயர்வு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம்...

இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு...

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...