கெப் ரக வாகனமொன்று மோட்டார் பைக் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் என்பவற்றுடன் மோதி திஸ்ஸமஹாராம – பெரலிஹெல வீதியில் விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார்வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த பெண் ஆகியோர் தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மோட்டார் வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இவர் 71வயதுடைய திஸ்ஸாமஹாராம பகுதியை சேர்ந்தவராவார்.
காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கெப் ரா வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.