இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜானதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.
இரண்டு வருட காலமாக, தனிப்பட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு நாடு என்ற வகையில் ஒவ்வொருவரினதும் மதங்களினால் போதிக்கப்பட்ட ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் ஒழுக்கம் என்பன தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை உலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாகவும் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த உலகை, மீள புத்துயிர்பெறச் செய்வதுடன், நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரது பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.