தொடரூந்து பயணச் சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.
தொடரூந்து திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதனிடையே தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக்கொண்டனர்.
அதேவேளை தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.