எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் 25 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சலுகை துரிதமாக வழங்கப்பட்டால், கட்டண அதிகரிப்பு வீதத்தில் மாற்றத்தை செய்ய முடியும் என சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
இல்லை என்றால், தமது கட்டண அதிகரிப்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.