ஓமிக்ரான் எனும் புதிய தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது.எனவே மக்கள் இந்த நோய் அறிகுறிகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, சில அறிகுறிகள் ஏற்படும்போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது.
•தொடர்ச்சியான இருமல்
காய்ச்சல் அல்லது
•அதிக உடல் வெப்பநிலை
•வாசனை அல்லது சுவையை இழத்தல் அல்லது மாறுபடுதல்
∆ஆனால் கோவிட் பாதிப்பு இருக்கும் சிலருக்கு, “மோசமான சளி இருப்பதைப் போல்,” தலைவலி, தொண்டைப் புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஸோயி கோவிட் ஆய்வு (Zoe Covid App) என்ற செயலியில், லட்சக்கணக்கான மக்களிடம் அவர்களுடைய அறிகுறிகளைப் பதிவு செய்யும்படி கேட்டு, ஆதிக்கம் செலுத்தும் டெல்டா திரிபு மற்றும் தற்போது அதிகமாகப் பரவக்கூடிய புதிய திரிபான ஒமிக்ரான் ஆகிய இரண்டிலும் உள்ள அறிகுறிகளை புலனாய்வாளர்கள் பார்த்து வருகின்றனர்.