எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை 7,000 பேக்கரிகளில் சுமார் 3,500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
மாவுக்கான விலை அதிகரிப்பு, மாவு தட்டுப்பாடு மற்றும் பேக்கரி பொருட்களின் விலையேற்றம் போன்றவையும் பேக்கரிகள் மூடப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் சந்தையில் உள்ள கேள்வியின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.