அரச வைத்தியர்களுக்கு சாதகமான பதிலொன்று கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படுவதாக அறிவித்துள்ளனர் நேற்று (22) காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த போராட்டத்தை முன்னடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது இந்த நிலையில், வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால், நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் தடையின்றி நடைபெறுவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியர்கள் தெரிவித்தனர்
செ.திவாகரன்