கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட காலப்பகுதியில் கொழும்பு, அதனை அண்மித்த பிரதேசங்களில் நடமாடும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ் மா அதிகாரி சந்தன விகரமரத்ணவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள் மற்றும் பிரதேசங்களை அண்மித்த விசேட வாகன திட்டமொன்று அமுல்படுத்துமாறும், குற்றவாளிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு சிவில் உடையில் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.