பட்டதாரிகள் 51,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச அபிவிருத்தி அதிகாரிகளாக இக்குழுவினர் நியமிக்கப்பட்ட பணியிடத்தில் நிறந்தரமாக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
ஒரு வருட பயிற்சி முடித்த 42,500 பட்டதாரிகள் முதலில் உறுதி செய்யப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் ஒரு வருட பயிற்சியை முடித்ததும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி உறுதி செய்யப்படுவார்கள்.
சுமார் 22,000 நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர் தொழிலில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.