அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய புரட்சிக்கர காவல் படை தெரிவித்துள்ளது.

கெஷ்ம் தீவில் உள்ள ஒரு கட்டிடம் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தனர்.

ஜஞ்சான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் புரட்சிக்கர காவல்படையின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்களால் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், வடக்கு குவைத்தில் உள்ள சீன நிறுவனம் ஒன்றின் கட்டடம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதாக குவைத் தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஜப்பானில் நில அதிர்வு – 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு!

ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து...

கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக...