Date:

ஆயிரம் ரூபா வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனம் வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை ஆராய்வதற்காக விசேட ஆணையாளர் தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட ரீதியான தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெருந்தோட்ட மக்களுக்கு நாளாந்த ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீடு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளன.

எவ்வாறாயினும் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு நீதிமன்றினால் இதுவரையில் தடைவிதிக்கப்படவில்லை.

இவ்வாறான பின்னணியில் சில பெருந்தோட்ட நிறுவனங்கள் நாளாந்தம் ஆயிரம் வேதனம் வழங்குவதில் இருந்து விலகியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

90 சதவீதமான இடங்களில் நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புறக்கோட்டையில் தனியார் பேருந்து விபத்து

இன்று (12) காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M....

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

மின்னேரியாவில் வாகன விபத்து: 26 பேர் காயம்

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த...

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட...