கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்றுறுதியான வெளிநாட்டவர் தவிர்ந்த, ஏனையோர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொற்றாளருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஒமைக்ரொன் தொற்று உறுதியானது.
இந்தத் திரிபை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு இரண்டு வாரங்களானமையால், ஒமைக்ரொன் தொற்று உறுதியானவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5ஆம் அலை உருவாகும் ஆபத்து உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.