நாட்டில் இதுவரை 8 மில்லியன் சேதன திரவ உரம் மற்றும் 3 இலட்சம் டன் சேதன பசளை விநியோகிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எஞ்சியவர்களுக்கான சேதன பசளைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத சகல வயல் காணிகளிலும் தெங்கு பயிரிட அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.