யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று(17) இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய ஐவர்கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில், இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் விசாரணை தொடரவுள்ளது.
இதேவேளை, யுகதனவி மின்நிலைய உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், அவசியமாயின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கு மின்விநியோகத் தடையை ஏற்படுத்த முடியும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அதன் அரசியல்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.