கெப்டன் சர்ச்சையில் விராட் கோலியின் மகள் மீதே குற்றச்சாட்டுக்கள் பரவ தொடங்கியதால் மௌனம் உடைத்துள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் கெப்டனாக இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் ஒருபுறம் சூடுபிடிக்க தென்னாப்பிரிவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் கோலி விளையாடப்போவதில்லை எனத்தெரிவிக்கப்பட்டது.
இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முதலில் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கவிருந்தது. பின்னர் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பால் டிசம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த அட்டவணையில் ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 11ஆம் திகதி யன்று இருந்ததால் அன்றைய தினம் கண்டிப்பாக கோலியால் வர முடியாது எனத்தகவல் வெளியானது.
ஏனென்றால் விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகியோரின் மகள் ‘வாமிகாவி’ -ன் பிறந்தநாள் ஜனவரி 12 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. எனவே மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தான் இந்திய அணியின் தொடரை கோலி புறக்கணித்ததாக கூறப்பட்டது.
இவர் ஏற்கனவே மகள் பிறந்த போது ஆஸ்திரேலிய தொடரை பாதியில் விட்டு வந்ததால், இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் கோலியின் மகள் மீது சில ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோபத்தை காட்டி வந்தனர்.
இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ளார் விராட் கோலி. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒருநாள் போட்டி தொடரில் நான் கண்டிப்பாக இருப்பேன் எனக்கூறியுள்ளார். மேலும், சில நிகழ்ச்சிகளுக்காக ஒருநாள் போட்டியை நான் புறக்கணிக்கிறேன் என்று வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது. அதனை கூறியவர்கள் விளக்கமளித்தே ஆக வேண்டும் என கோலி அறிவித்தார்.
தற்போது மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணை படி, ஜனவரி 12ஆம் திகதியன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும். அந்த போட்டி விராட் கோலி விளையாடும் 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். எனவே மகளின் பிறந்தாளுக்காக அன்றைய தினம் நிச்சயம் ஒரு சதத்தை பரிசாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.