Date:

ஆசியாவின் ராணியை சொந்தமாக்குவதிலும் அமெரிக்கா – சீனா இடையே கடும் போட்டி

இலங்கையில் கண்டறியப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நீலக்கல்லை, இணையவழியில் இடம்பெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னதாக விலைமனு கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ள நிலையில், சீனாவும் இந்த போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வொஷிங்டன் நகரில் உள்ள நூதனசாலை ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவும் குறித்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

310 கிலோகிராம் எடைகொண்ட ஆசியாவின் ராணியென அழைக்கப்படும் இந்த நீலக்கல்,  இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், இந்த நீலக்கல் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் படிகத்தினாலானமையினால் அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்துக்கும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு!

முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு...

வளியின் தரம் குறைவு! | முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்..!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட...