தென் ஆபிரிக்காவில் முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரொன் கொவிட் திரிபு தற்போது உலகில் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலான ஒரு நிலைமையை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரொன் கொவிட் திரிபானது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றது என ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதுடன், மோசமான நோய் நிலைமைகளை உருவாக்கும் என்பது தொடர்பான தகவல்கள் குறைவாகவே உள்ளது.
ஒமிக்ரொன் திரிபுகள் காரணமாக தொற்றாளர்கள் எண்ணிக்கை கனிசமானளவு அதிகரிப்பதுடன், அதன் ஆபத்தும் அதிகமாக காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.