ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி சில நாட்கள் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின்றி நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.