Date:

சதொச விற்பனையகங்களில் 50 அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில், சில வகையான அரிசிகளை, 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு அரிசி ஒரு கிலோகிராம் 99 ரூபா 50 சதத்திற்கும், சிறந்த சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபா அளவிலும் சதொச வர்த்தக நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

எந்தவொரு அரிசி வகையையும், சதொசயில் தலா 5 கிலோகிராம் அளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோகிராம் 240 ரூபாவுக்கும், நூடில்ஸ் ஒரு பைக்கற்று 125 ரூபாவுக்கும், சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை, சந்தையில் நிலவும் விலையை விடவும், குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி

ஹற்றன் நகருக்குத் தேவையான சமையல் எரிவாயு (Gas) போதுமான அளவு கிடைக்காத...

சினோபெக் , லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec)...

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை...

இன்று 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து...