யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த தினங்களில் கரையொதுங்கிய நிலையில் பல சடலங்கள் மீட்கப்பட்ட போதிலும் இதுவரையில் குறித்த சடலங்கள் அடையாளம் காணப்படாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்துரைத்த அவர், குறித்த சடலங்களில் கடந்த இரண்டாம் திகதி மீட்கப்பட்ட சடலம் காணாமல் போனதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


 
                                    




