Date:

சில நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்

ஒமிக்ரோன் கொவிட் தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்நாட்டினுள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த சில நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பபயணிகளுக்கான பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...