Date:

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ‘இன்டபோல்’ எனப்படும் சர்வதேச பொலிஸாரினால் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த பெண்ணை பிரேசில் பொலிஸார் கைதுசெய்வதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்திருந்தபோது, அவர் தாய்லாந்துக்கு தப்பிச்சென்றுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், நீண்ட காலம் நாட்டில் தங்கியிருக்கும் நோக்கில் குறித்த சந்தேக நபர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மீண்டும் பிரேசிலுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...