Date:

மக்களை ஏமாற்றுகின்றதா லிட்ரோ?

லிற்றோ காஸ் நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை கொள்வனவு செய்த சிலிண்டரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த சிலிண்டரில் சிவப்பு சீல் லேபில் ஒட்டப்பட்ட நிலையில் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். எனினும் அந்த லேபிளை அகற்றியபோது, ​​சிவப்பு லேபிளுடன் பின்னால் பழைய வெள்ளை லேபிள் சுற்றி இருந்துள்ளது.

இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக பழைய எரிவாயு சிலிண்டரில் வெள்ளை லேபிளின் மேல் நிறுவனம் சிவப்பு லேபிளை ஒட்டியுள்ளதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

பொகவந்தலாவையில் உள்ள லிற்றோ காஸ் முகவர்களுக்கு இன்று புதிய சிலிண்டர்களை இன்று நிறுவனம் விநியோகித்துள்ளது. எனினும் பழைய கையிருப்புகளை வேறொரு நாளில் பெற்றுக்கொள்வதாக நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஹட்டன் மற்றும் பொகவந்தலாவையில் எரிவாயு விற்பனை மேலும் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக லிற்றோ எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் லிற்றோ காஸ் சிலிண்டர் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து, சீர்செய்யப்பட்ட புதிய சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...

அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு...

சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான்,...