Date:

புரவலா் புத்தகப் பூங்காவின் 27வது புத்தக வெளியீட்டு விழா

புரவலா் புத்தகப் பூங்கா ஏற்பாடு செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முனீருல் மில்லத் பேராசிரியா் கே. எம். காதார் மொஹிதீன் மற்றும் அவருடன் கொழும்பு வந்து துாதுக்குழுவினர்கள் கௌரவிப்பு நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (7) கொள்ளுப்பிட்டியில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய பேராசிரியர் புலவலர் ஹாசிம் உமா் இலங்கை மட்டுமல்ல – இந்தியா நாடுகளிலும் பிரபல்யம் பெற்றுள்ளாா். அங்குள்ள ஊடகங்களிலும் அவா் நிகழ்வுகள் காணக்கிடைக்கின்றது. இந்தியா வருகை தந்து அங்கும் அவரே நுால்களின் முதற்பிரதிகளை பெற்றுவருகின்றாா். அவா் எழுத்தாளா்களின் நுால்களின் முதற்பிரதியை பெற்று இலக்கியவாதிகளுக்கும் நுாலாசிரியா்களுக்கும் கைகொடுப்பதனையிட்டு பேராசிரியா் காதா் மொஹிதீன் புரவலா் ஹாசிம் உமா் அவா்களை பாராட்டிப் பேசியதுடன் அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தாா்.


இந் நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியா் தெ.செந்திவேலவா் பேராசிரியா் காதா் மொஹிதீனுக்கு பொன்னாடை போற்றியதுடன் புரவலா் புத்தகப் பூங்காவின் 27வது வெளியிடான வீ.தனபாலசிங்கம் எழுதிய ” ஊருக்கு நல்லது சொல்வேன் நுாலின் பிரதி ஒன்றும் கையளித்தாா்

”அமாக்க வாசம்” எனும் நுாலுக்கான அரச தேசிய விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான அல் அஸூமத் அவா்களையும் பேராசிரியா் பாராட்டி கொளரவித்தாா்.
அரப் நியுஸ், கொழும்பு டைம்ஸ் பிரத ஆசிரியா் எம்.சி ரசூல்டீன் அவா்கள் திருச்சி மாவட்டத்தின் டொக்டா் ஜலீல் சுல்தான் அவா்களை கௌரவித்தாா்.

அத்துடன் வெலிகம றிம்சா முஹம்மதின் எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் எனும் சஞ்சிகை பேராசிரியருக்கும் ஏனைய இந்திய துாதுக்குழுவுக்கும் கையளிக்கப்பட்டது.

நேத்ரா தொலைக்காட்சியின் செய்திஆசிரியா் சியாம் காசிம். இந் நிகழ்வில் பேராசிரியரினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டாா். இந் நிகழ்வினை பத்திரிகை மற்றும் எலக்ரோனிக் ஊடகங்களின் ஊடகவியளாளா்களும் கலந்து சிறப்பித்தனா் இந் நிகழ்வினை வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் சித்தீக் ஹனிபா தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை...

ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் பிமல்

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து...

லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் வாகன நெரிசல்

பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும்...