Date:

நாடாளுமன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க 11 பேரடங்கிய குழு நியமிப்பு

நாடாளுமன்றில் கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து, இது போன்ற சம்பவங்கள் மீள ஏற்படாதிருக்க தேவையான பரிந்துரைகளை முன்வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை நாடாளுமன்றம் ஆரம்பமானதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (07) தம்மை சந்திக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தபோது, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...