தொடர்ந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
26 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார். மேலும், 700,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய 59 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.