நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்காரவிற்கு ஆளும் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தாக்க முற்பட்டதாகக் கூறி அவர்கள் இந்த அமர்வு புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற அமர்விலிருந்து வெளியேறியதுடன் நேற்றைய அமர்விலும் அவர்கள் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
அந்த எதிர்ப்பு நடவடிக்கையை இன்றைய தினமும் தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதேநேரம் இது தொடர்பில் கலந்துரையாடுவற்காகக் கட்சியின் செயற்குழு இன்று மாலை கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
