பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரது தலை முதல் கால் வரையிலான உடற்பாகங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உடலின் உட்பாகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் சியல்கோட்டிலிருந்து லாகூர் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரியந்த குமார தியவடனவின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
அத்துடன் இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பிரியந்த குமார தியவடன பணியாற்றிய தொழிற்சாலையின் 900 பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதோடு அங்குள்ள பணியாளர்கள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
