பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மேல் நீதிமன்றத்தில் இன்று (28) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


