பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த, இலங்கையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற இலங்கையரே அதே தொழிற்சாலையின் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர் இலங்கையரின் உடலை தீயிட்டு எரித்துள்ளனர்.
எனினும், குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.