உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரொன் கொவிட் திரிபு இலங்கையிலும் பரவுவதனை தடுக்க நாட்டை முடக்குவது தீர்வாக அமையாது என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.முனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த வைரஸ் திரிபின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் இந்த நிலைமை தொடர்பில் மிக அவதானம் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


                                    




