Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவு- கிரியெல்ல

பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கற்பதற்கு சந்தர்ப்பத்தை  ஏற்படுத்திக்கொடுக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கல்வி அமைச்சரிடம் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றது.

இதனால் அவர்களுக்கு உயர்கல்வியை தொடரக் கூடிய வகையில் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

அறிவுப்பூர்வமாக இருப்பதாலேயே இவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். தேர்தலில் வெற்றிப் பெறுவது என்பது எந்தளவுக்கு கடினமானது என்று தெரியும்.

அத்துடன் 5 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கும்போது எந்தளவுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சி இருக்கும். இதனால் அவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதிக்க முடியும்.

இந்த பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1970 காலப்பகுதியில் பரீட்சை இன்றி சட்டக் கல்லூரிக்கு நுழைய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அப்போதிருந்த பாராளுமன்ற செயலாளர் அதனை ஏற்படுத்தியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே மஹிந்த ராஜபக்‌ஷவும் சட்டக் கல்லூரி செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...