அதேநேரம், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (01) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தியா தமது பொருளாதார திட்டங்களினூடாக இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், பதவியேற்றதன் பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள் மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை அவர் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
