நீண்டகாலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், பாடசாலைகளில் முழு ஆண்டுக்குமான வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்களை முழுமையாக அறவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பெற்றோர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எனவே, இரண்டு ஆண்டுகளுக்குமான வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்களை அறவிடுவதை உடனடியாக நிறுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.