சினோர்பாம் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக செலவிட்ட நிதித் தொகை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது அவர்கள் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக கோசமெழுப்பினர்.
இந்தநிலையில் இலங்கைக்கு கோவிட் தடுப்பூசியை 10 டொலருக்கு கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தபோதும் 15 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.
இதன் மூலம் இந்த கொள்வனவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
எனினும் இதனை ஆட்சேபித்த ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன, சினோபார்ம் தடுப்பூசிகள் 12 டொலருக்கே கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல, உரையாற்றியபோது சுகாதார அமைச்சுக்கு மேலும் நிதியொதுக்கீடுகள் அவசியம் என்று தெரிவித்தார்.