நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகியதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டபிள்யூ. எச். லலித் வர்ணகுமாரவின் பெயரை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கான தூதுவராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மஹிந்த சமரசிங்க அண்மையில் விலகினார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக டபிள்யூ. எச். லலித் வர்ணகுமாரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்காணி லியனகே தெரிவித்தார்