ஏறாவூரில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ள சம்பவமொன்று ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் சமையல் வேலைகளை முடித்து விட்டு எரிவாயு சிலிண்டரை நிறுத்திய பின்னர் சமையலறையிலிருந்து வெளியே வந்தபோது கேஸ் அடுப்பு வெடித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.