யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.