நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாகியுள்ளதால் அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளதாக மஹிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு, இராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இவருக்கு பதிலாக ஆளும் தரப்பு, யாரை நாடாளுமன்றம் அனுப்பும் என்பது தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.