கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில், ரெபிட் அன்டிஜன்” சோதனையில் “பொசிடிவ்” பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.