எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், எனினும் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும், அதேவேளை தொடர்ச்சியான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்ததுடன், நிதியமைச்சர் விலையேற்றத்தை முன்மொழியவில்லை என்றும் மஹிந்த அமரவீர உறுதிபடுத்தினார்.