Date:

புதிய காற்றழுத்த தாழமுக்கம்

சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன்  அக்கடற் பிரதேசங்கள் மிகவும்  கொந்தளிப்பாகவும் காணப்படும்.

தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள   கடற்பரப்புகளுக்கு மேலாகவும் இன்றிலிருந்து ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க...

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373