Date:

நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 1,361 டெங்கு நோயாளர்கள்

தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 1,361 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 டெங்கு நோயாளர்கள் மாத்திரம் பதிவாகியிருந்தனர்.

இந் நிலையில் இந்த ஆண்டு நவம்பரில் வெறும் 10 நாட்களுக்குள் பதிவான டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

இது இந்த ஆண்டு தொற்றுநோயின் அதிக தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

கொழும்பு, மட்டக்களப்பு, பதுளை, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலே கணிசமான டெங்கு நோயாளர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே வெள்ளம் குறையத் தொடங்கும் போது ஏற்படும் ஆபத்தான நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
  • கடுமையான தாகம்
  • நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்
  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
  • தலைசுற்றுதல்
  • கைகால்கள் குளிரடைதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...