வெலிசறை – மஹபாகே பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞன் உயிரிழந்தார்.
அவர் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (04), 16 வயதான இளைஞன் செலுத்திய வாகனம் மேலும் சில வாகனங்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் மஹபாகே பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே பலியானமை குறிப்பிடத்தக்கது.