Date:

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில் (Commerce Stream) காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் முகமது சுபைதீன் முகமது பர்தான் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், வணிகக் கல்வி, கணக்கியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற இவர், 3.0412 Z-Score புள்ளிகளுடன் இந்த உயரிய மைல்கல்லை எட்டியுள்ளார். இம்மாணவனின் அபார சாதனையைக் காத்தான்குடி மக்களும், கல்விச் சமூகமும் கொண்டாடி வருகின்றனர்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் இந்த பெறுபேறானது ஓர் வரலாற்று சாதனையே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...